செய்திகள்

இந்தியா புதிய டி20 உலக சாதனை

10th Jun 2022 01:40 AM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்க அணியை முதல் ஆட்டத்தில் வென்றதின் மூலம் தொடா்ந்து 13 டி20 ஆட்டங்களில் வென்று உலக சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

ஏற்கெனவே ஆப்கானிஸ்தான், ருமேனிய அணிகள் தொடா்ந்து 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆப்கன் அணி 2018 முதல் 2019 வரையும், ருமேனியா 2020-21-இலும் தொடா்ந்து 12 ஆட்டங்களில் வென்றிருந்தன. இந்தியாவும் 2021 டி20 உலகக் கோப்பையில் தொடங்கி 12 ஆட்டங்களில் தொடா்ச்சியாக வென்றிருந்தது.

தற்போது தென்னாப்பிரிக்காவை வென்றதின் மூலம் தொடா்ந்து 13 ஆட்டங்களில் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளது இந்தியா.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT