செய்திகள்

கூடுதலான ஐபிஎல் ஆட்டங்கள்: பிசிசிஐயின் புதிய திட்டம்

9th Jun 2022 03:53 PM

ADVERTISEMENT

 

வரும் ஆண்டுகளில் கூடுதல் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2022 போட்டியில் மொத்தமாக 74 ஆட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் வருடம் 59 ஆட்டங்களே நடைபெற்றன. இந்நிலையில் 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதற்கடுத்த இரு ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களை நடத்தவும் திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

2023-2027 ஐபிஎல் போட்டிகளின் புதிய ஒளிபரப்பு உரிமைக்கான இணைய வழி ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் 410 ஆட்டங்களை நடத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்தக் காரணங்களால் ஐபிஎல் போட்டி இரு மாதங்களுக்கும் அதிகமாக நடைபெறவும் வாய்ப்புள்ளது. ஐபிஎல் போட்டிக்குக் கிடைக்கும் தொடர் ஆதரவு காரணமாக ஆட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் வருமானத்தை ஏற்படுத்துவதற்காக இம்முடிவுகளை  பிசிசிஐ எடுத்துள்ளதாகத் தெரிகிறது. 

ADVERTISEMENT

Tags : BCCI i IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT