செய்திகள்

நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா

9th Jun 2022 01:35 PM

ADVERTISEMENT

 

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை நடத்த ரூ. 92.13 கோடியை ஒதுக்கீடு செய்து அதற்கான நிா்வாக ஒப்புதலைத் தமிழக அரசு அரசு வழங்கியுள்ளது.

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை நடத்துவதென முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஜூலை 28, இரவு 7 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT