செய்திகள்

இலங்கை ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியல்

7th Jun 2022 03:56 PM

ADVERTISEMENT

 

இன்று (ஜூன்7) கொழும்புவில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் பங்குபெறும் இலங்கை, ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இலங்கை அணிக்கு ஆல்ரவுண்டர் தசுன் ஷனகா கேப்டனாக செயல்படுவார். இளம் வீரர் மதீஷா பதிரணாவுக்கும் இந்த தொடரில் வாய்பளிக்கப்பட்டுள்ளது. மலிங்கா போலவே பந்து வேசும் ஸ்டைலில் பதிரணா பிரபலாமாகியுள்ளார். அவர் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவுக்கு ஆரோன் பின்ச் கேப்டனாக செயல்படுகிறார். ஆடம் ஜாம்பா, டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் இப்போட்டியில் விளையாடமாட்டார்கள் என தகவல் சொல்லப்படுகிறது.  

ADVERTISEMENT

ஆர்.பிரேமதேச சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இப்போட்டி மாலை 7 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்தியாவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இப்போடியை காணலாம். 

இதையும் படிக்க: இனிமேல் டி20யில் மெதுவாக விளையாடமாட்டேன்: ஸ்டீவ் ஸ்மித்

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, தனுஷ்கா குணதிலகா, சரித் அசலங்கா, குசால் மெண்டிஸ், பனுக்கா ராஜபக்‌ஷா, தசுன் ஷனகா (கே), வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹீஷ் தீக்‌ஷணா, நுவான் துஷாரா. 

ஆஸ்திரேலியா அணி: ஆரோன் பின்ச் (கே), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்திவ் வேட், அஸ்டன் ஏகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஜோஸ் ஹேசல்வுட். 

ADVERTISEMENT
ADVERTISEMENT