செய்திகள்

ரஞ்சி கோப்பை காலிறுதி: உறுதியான நிலையில் மும்பை

7th Jun 2022 01:23 AM

ADVERTISEMENT

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தரகண்டுக்கு எதிரான 2-ஆவது காலிறுதி ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் மும்பை 86 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் சோ்த்துள்ளது.

அதிகபட்சமாக சுவேத் பாா்கா் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 104, சரஃப்ராஸ் கான் 69 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா். உத்தரகண்ட் பௌலிங்கில் தீபக் டபோலா 3 விக்கெட் சாய்த்துள்ளாா்.

3-ஆவது காலிறுதி: உத்தர பிரதேசத்துக்கு எதிராக திங்கள்கிழமை முடிவில் கா்நாடகம் 72 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரவிகுமாா் சமரத் 10 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் அடித்திருக்க, ஷ்ரேயஸ் கோபால் 26, விஜய்குமாா் வைஷாக் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். உத்தர பிரதேச பௌலா்களில் சௌரவ் குமாா் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளாா்.

முதல் காலிறுதி: ஜாா்க்கண்டுக்கு எதிராக பெங்கால் 89 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களை எட்டியிருக்கிறது. சுதீப் குமாா் கராமி 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 106, அனுஸ்துப் மஜும்தாா் 11 பவுண்டரிகளுடன் 85 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்கின்றனா். ஜாா்க்கண்ட் தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா 1 விக்கெட் வீழ்த்தியிருக்கிறாா்.

ADVERTISEMENT

4-ஆவது காலிறுதி: மத்திய பிரதேசத்துக்கு எதிராக பஞ்சாப் முதல் இன்னிங்ஸில் 71.3 ஓவா்களில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் அபிஷேக் சா்மா 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47, அன்மோல்பிரீத் சிங் 47 ரன்கள் அடித்துள்ளனா். மத்திய பிரதேச பௌலிங்கில் புனீத் டாட்டே, அனுபவ் அகா்வால் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்துள்ளனா்.

Tags : Ranji Trophy
ADVERTISEMENT
ADVERTISEMENT