செய்திகள்

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகல்

7th Jun 2022 11:04 AM

ADVERTISEMENT

 

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். 

காலின் டி கிராண்ட்ஹோம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 3வது நாள் ஆட்டத்தில் பந்து வீசும் போது அவருக்கு காயம் எற்பட்டது. அதனால் அவரால் பந்து வீச முடியவில்லை. இங்கிலாந்து நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியசத்தில் வென்றது. 

இதையும் படிக்கவேகமான பந்து வீசுவது என் நோக்கமல்ல: உம்ரான் மாலிக் 

ADVERTISEMENT

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி தடுமாறிய போது இவர் மட்டுமே 42 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மைக்கெல் ப்ரேஸ்வெல் விளையாடுவார். 

நியூசிலாந்து பயிர்சியாளர் கேரி ஸ்டெட், “தொடரின் ஆரம்பித்திலேயே இப்படி காயம் ஏற்படுவதற்கு காலின் டி கிராண்ட்ஹோம்க்கு அவமானம். அவருடைய பங்கு டெஸ்ட் அணியில் மிகவும் பெரியது. நாங்கள் நிச்சயமாக அவரை மிஸ் செய்கிறோம். மைக்கெல் ப்ரேஸ்வெல் அடுத்து இவருக்கு பதிலாக ஆடுவார். அவர் குணமாக 10 முதல் 12 வாரங்கள் ஆகும்” எனக் கூறினார். 

இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT