செய்திகள்

எனது விருப்பமான கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர்: ஹார்திக் பாண்டியா

7th Jun 2022 05:16 PM

ADVERTISEMENT

 

இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனக்கு விருப்பமான கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் எனக் கூறியுள்ளார். 

ஹார்திக் பாண்டியா இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணிக்கு தலைமைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமான இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் பெற்றார். 

“எனக்கு ஜாக் காலிஸ், விராட், சச்சின் சார் என எண்ணற்ற வீரர்களை பிடிக்கும். அதிகமான அளவில் சிறந்த வீரர்கள் இருப்பதால் யாரையும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. எனக்கு வாசிம் ஜாஃபரைதான் அதிகமாக பிடிக்கும். அவர் விளையாடுவதை பார்பதற்கு மிகவும் பிடிக்கும். எல்லா சிறந்த வீரர்களுக்கும் மேலாக அவரை வைக்க விரும்புகிறேன். அவரைப் போல விளையாட முயற்சித்துள்ளேன். ஆனால் அவரது க்ளாஸ் போல வருவதில்லை. 
க்ருணால் மற்றும் நான் இருவர்களும் ஒருவருக்கொருவர் முதுகெலும்பாக இருப்போம். நாங்கள் கிரிக்கெட், வாழக்கை என எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவோம். 6 வருத்திற்கு முன்பு நானும் என் சகோதரரும் இந்தியாவிற்கு விளையாடுவோம் என யாராவது கேட்டு இருந்தால் நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன். நானும் க்ருணாலும் வித்தியாசமான வீரர்கள். எங்களுக்கு எப்போதும் இதனால் சண்டை வந்ததில்லை. அணியில் எங்களுடைய பங்கு வெவ்வேறானது” என ஹார்திக் பாண்டியா கூறினார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT