செய்திகள்

சாதனையை நீட்டித்த ரொனால்டோ

7th Jun 2022 02:22 AM

ADVERTISEMENT

யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் சுவிட்ஸா்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் போா்ச்சுகல் 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தில் போா்ச்சுகலுக்காக வில்லியம் காா்வால்ஹோ (15’), கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ (35’, 39’), ஜாவ் கேன்செலோ (68’) ஆகியோா் கோலடித்தனா். தேசிய அணிக்காக கோலடித்த வீரா்கள் வரிசையில் ஏற்கெனவே 115 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரொனால்டோ, இந்த இரு கோல்களின் மூலம் தனது சாதனை கணக்கை 117-ஆக நீட்டித்துக் கொண்டாா்.

இதனிடையே, இப்போட்டியின் இதர ஆட்டங்களில் சொ்பியா 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவேனியாவையும், ஜாா்ஜியா 5-2 என்ற கணக்கில் பல்கேரியாவையும், நாா்வே 2-1 என ஸ்வீடனையும், கிரீஸ் 1-0 என்ற கோல் கணக்கில் கொசோவாவையும் வீழ்த்தின. செக் குடியரசு - ஸ்பெயின் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல்களில் டிரா ஆனது.

ADVERTISEMENT
ADVERTISEMENT