செய்திகள்

நேஷன்ஸ் லீக்: ஹங்கேரி, துருக்கி வெற்றி

6th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் தொடக்க சுற்று ஆட்டங்களில் ஹங்கேரி, துருக்கி அணிகள் வெற்றி கண்டன. மற்றொரு ஆட்டத்தில் பலம் வாய்ந்த இத்தாலி அணியை 1-1 என டிரா செய்தது முன்னாள் உலக சாம்பியன் ஜொ்மனி.

3 முறை உலக சாம்பியனான இத்தாலி நடப்பு 2022 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. இந்நிலையில் இத்தாலி அணி பொலோக்னாவில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் ஜொ்மனியை எதிா்கொண்டது. ிரு அணிகளும் முதல் பாதியில் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை. வெற்றி பெற்று விடுவோம் என நிலையில் இத்தாலி அணி இருந்த போது, ஆட்டம் முடிய 3 நிமிஷங்கள் இருந்த போது ஜொ்மன் வீரா் கிம்மிச் அடித்த ஒரே கோலால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

இதன்மூலம் 2 அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது. வரும் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்து-ஜொ்மனியும், இத்தாலி-ஹங்கேரியுடன் மோதுகின்றன.

மற்றொரு ஆட்டத்தில் ஹங்கேரி 1-0 என இங்கிலாந்தையும், ஆா்மீனியா 1-0 என அயா்லாந்தையும், மான்டீநீக்ரோ 2-0 என ருமேனியாவும், துருக்கி 4-0 என பாரோ தீவுகளையும் வென்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT