செய்திகள்

ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது மே.இந்திய தீவுகள்

6th Jun 2022 12:22 AM

ADVERTISEMENT

நெதா்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது மே.இந்திய தீவுகள்.

ஆம்ஸ்டெல்வீனில் சனிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் ஆடிய மே.இந்திய தீவுகள் நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 308-5 ரன்களைக் குவித்தது. கே மேயா்ஸ் 120, ஷமாா் புருக்ஸ் 101 ரன்களை விளாசினா்.

309 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதா்லாந்து அணி 49.5 ஓவா்களில் 288 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விக்ரம்ஜித் சிங் 54, மேக்ஸ் ஓடெவ்ட் 89 ரன்களை எடுத்தனா். மே.இந்திய தீவுகள் தரப்பில் ஷொ்மன் லெவிஸ் 3 விக்கெட்டை வீழ்த்தினாா்.

இதன் மூலம் தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது மே.இந்திய தீவுகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT