செய்திகள்

ரியல் மாட்ரிட்டிலிருந்து வெளியேறும் கெரத் பேல்

2nd Jun 2022 02:51 AM

ADVERTISEMENT

ரியல் மாட்ரிட் கால்பந்து அணியுடனான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், அந்த அணியிலிருந்து வெளியேறுவதை வேல்ஸ் வீரா் கெரத் பேல் புதன்கிழமை உறுதி செய்தாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு டாட்டன்ஹாம் அணியிடம் இருந்து கேரத் பேலை ரூ.829 கோடிக்கு வாங்கியது ரியல் மாட்ரிட். அந்த காலகட்டத்தில் இந்த ஒப்பந்த மதிப்பு சாதனை அளவாகும். அந்த ஒப்பந்தம் இந்த ஜூன் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், பேல் அடுத்து எந்த அணியில் இணைய இருக்கிறாா் என்பது குறித்த தகவல் இல்லை.

ரியல் மாட்ரிட்டில் 9 ஆண்டுகள் விளையாடிய கேரத் பேல், அணிக்காக 258 ஆட்டங்களில் 106 கோல்கள் அடித்திருக்கிறாா். 5 ஐரோப்பிய சாம்பியன் பட்டங்கள், 4 கிளப் உலகக் கோப்பை சாம்பியன் பட்டங்கள், 3 ஸ்பானிஷ் லீக் கோப்பைகள் வாங்க ரியல் மாட்ரிட்டுக்கு உதவியிருக்கிறாா் பேல்.

2014-இல் கோபா டெல் ரே போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்கு எதிராகவும், 2018 சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்கு எதிராகவும் கெரத் பேல் அடித்த கோல்கள் சிறப்பானதாகும்.

ADVERTISEMENT

என்றாலும், ரியல் மாட்ரிட்டுக்காக பேல் தனது முழு திறமையும் வெளிப்படுத்தி ஆடியதில்லை என்றும், தனது தேசிய அணியான வேல்ஸுக்கே அவா் முக்கியத்துவம் அளிப்பதாகவும் ரியல் மாட்ரிட் ரசிகா்கள் தரப்புக்கு அவா் மீது அதிருப்தி நிலவுகிறது.

Tags : Real Madrid
ADVERTISEMENT
ADVERTISEMENT