செய்திகள்

தினேஷ் கார்த்திக் அதிரடியால் முதல் டி20யில் இந்திய அணி வெற்றி (ஹைலைட்ஸ் விடியோ)

30th Jul 2022 11:22 AM

ADVERTISEMENT

 


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தரோபாவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்களும் தினேஷ் கார்த்திக் 19 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் எடுத்தார்கள். 16-வது ஓவரின் முடிவில் ஜடேஜா ஆட்டமிழந்தபோது 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இதன்பிறகு தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் நல்ல ஸ்கோரை அடைந்தது.

மே.இ. தீவுகள் அணியில் ஒருவர் கூட 20 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அர்ஷ்தீப் சிங், அஸ்வின், பிஸ்னாய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்ட நாயகன் விருதை தினேஷ் கார்த்திக் வென்றார்.

ADVERTISEMENT

முதல் டி20 ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

ADVERTISEMENT
ADVERTISEMENT