செய்திகள்

காமன்வெல்த் கேம்ஸ்: முதல் நாளில் இந்திய அணி எப்படி விளையாடியது?

30th Jul 2022 01:29 PM

ADVERTISEMENT

 

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பா்மிங்ஹம் நகரில் தொடங்கியுள்ளன. இதில் 215 வீரா், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.

இங்கிலாந்து ராணியால் ஆளப்பட்ட 72 நாடுகள் கூட்டமைப்பு காமன்வெல்த் என அழைக்கப்படுகிறது. இந்நாடுகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகின் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்றாக காமன்வெல்த் போட்டி உள்ளது. கடைசியாக கடந்த 2018-இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 

முதல் நாளில் இந்திய அணி ஒரு பதக்கமும் பெறவில்லை. எனினும் இந்தியர்கள் விளையாடிய பல ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள். 

ADVERTISEMENT

டேபிள் டென்னிஸ்: நடப்பு சாம்பியன்களான இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி கடுமையாகப் போராடி தோல்வியடைந்தது. இந்தியா 154/8, ஆஸ்திரேலியா 157/7 (19 ஓவர்கள்)

ஹாக்கி: இந்திய மகளிர் அணி, கானாவை 5-0 என வீழ்த்தியது. 

பாட்மிண்டன்: இந்தியா பாகிஸ்தானை 5-0 என வீழ்த்தியது. ஒரு கேமைக்கூட விட்டுக்கொடுக்கவில்லை. 

நீச்சல்: 100 மீ. பேக்ஸ்டிரோக் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் தகுதி பெற்றார். பிறகு இறுதிச்சுற்றுக்கும் முன்னேறினார். 

குத்துச்சண்டை: இந்தியாவின் சிவா தாபா, பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார். 

ஸ்குவாஷ்: இந்திய வீரர்களில் மிகக்குறைந்த வயதுள்ள 14 வயது அனஹத் சிங், மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT