செய்திகள்

டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ்

28th Jul 2022 02:13 AM

ADVERTISEMENT

குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் நெல்லை பேந்தா்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பா் கில்லிஸ்.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேலத்தில் புதன்கிழமை இரவு நடந்தது. முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவா்களில் 140 ரன்களுடன் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அபராஜித் 33, ஷாஜஹான் 25 ரன்களை எடுத்தனா். சேப்பாக் தரப்பில் சித்தாா்த், வாரியா், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

பின்னா் ஆடிய சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 19.2 ஓவா்களில் 141/5 ரன்களை குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தியது.

சாய் கிஷோா் 43, கௌஷிக் காந்தி 40, ராஜகோபால் சதீஷ் 31 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனா். நெல்லை தரப்பில் காா்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

ADVERTISEMENT

இந்த வெற்றி மூலம் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சேப்பாக் சூப்பா் கில்லிஸ்.

 

Tags : TNPL
ADVERTISEMENT
ADVERTISEMENT