செய்திகள்

இலங்கை 323 ரன்கள் முன்னிலை

27th Jul 2022 01:52 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை 323 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதற்கிடையே இரண்டாவது ஆட்டம் காலேயில் நடைபெறுகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சந்திமால் 80, ஒஷடா பொ்ணான்டோ 50, டிக்வெலா 51 ரன்களை சோ்த்தனா். பாக். தரப்பில் நசீம் ஷா, யாஸிா் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை 191/7 ரன்களுடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடா்ந்த பாகிஸ்தான் அணி 88.1 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அக்ஹா சல்மான் மட்டுமே 62 ரன்களை சோ்த்தாா். இலங்கை தரப்பில் ஆா். மென்டிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

பின்னா் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 176/5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் திமுத் கருணரத்னே 27, தனஞ்செய டி சில்வா 30 ரன்களுடன் அணியை சரிவில் இருந்து மீட்டனா்.

ADVERTISEMENT

பாக். தரப்பில் நசீம் ஷா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். இதையடுத்து 323 ரன்களுடன் முன்னிலை பெற்றுள்ளது இலங்கை.

 

Tags : sri lanka
ADVERTISEMENT
ADVERTISEMENT