செய்திகள்

ரிஷப் பந்த் அதிரடி சதம்: தொடரைக் கைப்பற்றியது இந்தியா

17th Jul 2022 11:22 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்தின் அதிரடி சதத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 17) ஓல்டு டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இதையும் படிக்க:சிங்கப்பூர் ஓபன்: பி.வி.சிந்து சாம்பியன்

ADVERTISEMENT

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் ராய் 41 ரன்களையும் ஜோஸ் பட்லர் 60 ரன்களையும் குவித்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் அதிகபட்சமாக ஹர்த்திக் பாண்டியா 4 விக்கெட்களையும் சஹால் 3 விக்கெட்களையும் எடுத்தனர்.

பின்னர், 260 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணியில் தொட்டக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிக்கர் தவான் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

இருப்பினும் ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா இணை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தது. ஹர்திக் பாண்டியா 71 ரன்களில் ஆட்டமிழந்தாலும் 42.1 ஓவர்களில் 261 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த்  125 ரன்கள் குவித்தார். 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2 - 1 என்கிற கணக்கில் வென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT