செய்திகள்

விம்பிள்டன்: போராடி வென்ற நடால் (ஹைலைட்ஸ் விடியோ)

7th Jul 2022 11:17 AM

ADVERTISEMENT

 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றில் பிரபல வீரர் நடால் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் நடாலும் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸும் மோதினார்கள். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் மிகவும் தடுமாறினார். வயிற்றுத் தசைப்பிடிப்பு, கால் வலி போன்ற சிக்கல்களால் அவரால் இயல்பாக விளையாட முடியாமல் போனது. 2-வது செட்டின்போது சிறிது நேரம் காயங்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே மீண்டும் விளையாட வந்தார். 

2008 மற்றும் 2010-ல் விம்பிள்டனை வென்ற நடால், 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 (10/4) என்ற செட் கணக்கில் ஃபிரிட்ஸை வீழ்த்தி மகத்தான வெற்றியை அடைந்தார். 

ADVERTISEMENT

மற்றொரு காலிறுதியில் நிக் கிர்ஜியோஸ், கிறிஸ்டியன் கேரினை 6-4, 6-3, 7-6 (7/5) என வென்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறினார். 

நடால் - கிர்ஜியோஸ் மற்றும் ஜோகோவிச் - கேமரன் நாரி ஆகியோர் அரையிறுதிச் சுற்றில் மோதவுள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT