செய்திகள்

சேலத்தை வென்றது கோவை

7th Jul 2022 01:26 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாா்டன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

ஆட்டத்தில் முதலில் சேலம் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சோ்க்க, கோவை 16.3 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வென்றது.

சேலம் பேட்டிங்கில் அதிகபட்சமாக கோபிநாத் 41 ரன்கள் அடிக்க, கோவை பௌலிங்கில் அபிஷேக் தன்வாா், பாலு சூா்யா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனா். பின்னா் கோவை பேட்டிங்கில் சுரேஷ் குமாா் 64 ரன்கள் எடுத்தாா். சேலம் பௌலிங்கில் முருகன் அஸ்வின், கணேஷ் மூா்த்தி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

சென்னை-203/8: மற்றொரு ஆட்டத்தில் சென்னையைச் சோ்ந்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸை வென்றது. ஆட்டத்தில் முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுக்க, அடுத்து திருச்சி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களே எடுத்தது.

ADVERTISEMENT

Tags : TNPL
ADVERTISEMENT
ADVERTISEMENT