செய்திகள்

இலங்கை 3-வது ஒருநாள்: இந்திய அணியைக் காப்பாற்றிய ஹர்மன்ப்ரீத், பூஜா

7th Jul 2022 02:58 PM

ADVERTISEMENT

 

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. மேலும் முதல் இரு ஒருநாள் ஆட்டங்களை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 

3-வது ஒருநாள் ஆட்டம் பல்லேகலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

ADVERTISEMENT

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 49 ரன்களும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 75 ரன்களும் பூஜா வஸ்த்ரகர் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்களும் எடுத்ததால் இந்திய மகளிர் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுக்க முடிந்தது. 27-வது ஓவரில் 124/6 என நெருக்கடியில் இருந்தபோது கெளரும் பூஜாவும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இருவர் கூட்டணி 97 ரன்கள் எடுத்து இந்திய அணி கெளரவமான ஸ்கோரை அடைய உதவி செய்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 8-ம் நிலை மற்றும் அதற்குக் கீழே உள்ள பேட்டர்களில் அதிக அரை சதம் எடுத்தவர் (3) என்கிற பெருமையை பூஜா பெற்றுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT