செய்திகள்

இன்று வரை முறியடிக்க முடியாத கேப்டன் தோனியின் சாதனைகள்!

ச. ந. கண்ணன்


2017 ஜனவரி 4 அன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். 2014-ல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. 2007 முதல் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

ஒரு கேப்டனாக இன்றைக்கும் தோனியின் வசம் உள்ள சாதனைகள்

* 200 ஒருநாள் (110 வெற்றிகள், 74 தோல்விகள், 5 டை, 11 முடிவில்லை) 72 டி20 (41 வெற்றிகள், 28 தோல்விகள்) ஆட்டங்களில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். இந்திய கேப்டன்களில் அதிக ஒருநாள், டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் தோனி மட்டுமே. 

அதேபோல 60 டெஸ்டுகளிலும் தோனி கேப்டனாக இருந்துள்ளார் (27 வெற்றிகள், 18 தோல்விகள்). இந்திய டெஸ்ட் கேப்டன்களில் 2-ம் இடம் தோனிக்கு. கோலி அதிகபட்சமாக 68 டெஸ்டுகளில் கேப்டனாக இருந்துள்ளார். 

* டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன், தோனி மட்டுமே.

* அதிக டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்தவர்கள் என்கிற பெருமை தோனி, மார்கனுக்கு உண்டு. 2007 முதல் 2016 வரை 72 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார் தோனி. சமீபத்தில் ஓய்வு பெற்ற மார்கனும் 72 டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். தோனியை விடவும் ஒரு வெற்றி (42) கூடுதலாகப் பெற்றுள்ளார் மார்கன்.

* அதிக ஒருநாள் ஆட்டங்களுக்கு (200) கேப்டனாக இருந்தவர்களின் பட்டியலில் தோனிக்கு 3-வது இடம். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்றுவரை அதிக வெற்றிகள் கண்ட கேப்டன்களில் தோனிக்கு 2-ம் இடம். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு 110 வெற்றிகள். இந்திய கேப்டன்களில் அதிக ஒருநாள் ஆட்டங்களில் வெற்றிகளைக் கண்டவர் தோனி. 

* ஒருநாள் கேப்டன்களில் அதிக ஆட்டங்களை டை செய்தவர் தோனி. இவர் மட்டுமே 5 டை ஆன ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 

* ஒருநாள் ஆட்டங்களில் அதிக வெற்றி சதவீதத்தைக் கொண்டிருப்பவர் கோலி. 95 ஆட்டங்களில் 65 வெற்றிகளைப் பெற்றுள்ளார். வெற்றி சதவீதம் - 70.43% அடுத்த இடத்தில் தோனி - 59.52%. 200 ஆட்டங்களில் 110 வெற்றிகள்.

* 1983, 2003, 2011 என மூன்று ஒருநாள் உலகக் கோப்பை இறுதிச்சுற்று ஆட்டங்களுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் சிறந்த ஆட்ட நாயகன் விருது பெற்ற ஒரே இந்திய கேப்டன் - தோனி. 2011-ல் அவர் தலைமையில் இந்திய அணி கோப்பையையும் வென்றது.

* அதிக டெஸ்ட் ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் தோனி - 60 டெஸ்டுகள். அடுத்த இடத்தில் உள்ள வங்கதேசத்தின் விக்கெட் கீப்பர் முஷ்ஃபிகுர் ரஹிம் 28 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 

* அதிக ஒருநாள் ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் தோனி - 200 ஆட்டங்கள். அடுத்த இடத்தில் உள்ள பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ் அஹமது, 50 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

* அதிக டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் தோனி - 72 ஆட்டங்கள். அடுத்த இடத்தில் உள்ள பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ஃபராஸ் அஹமது, 37 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

* தொடர்ச்சியாக அதிக ஒருநாள் ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த இந்தியர்களில் தோனிக்கு 2-ம் இடம். 69 ஆட்டங்கள். அசாருதீன் 98 ஆட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

* டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் அதிக ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவர் தோனி - 332 ஆட்டங்கள். 2-வது இடத்தில் உள்ள பாண்டிங், 324 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT