செய்திகள்

லண்டனில் பிறந்த நாள் கொண்டாடிய தோனி (விடியோ)

7th Jul 2022 01:51 PM

ADVERTISEMENT

 

இன்று 41-வது பிறந்த நாளைக் கொண்டாடும் தோனிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சரி, தோனி இப்போது எங்கே என்ன செய்கிறார்?

பிறந்த நாளைக் கொண்டாடக் குடும்பத்தினருடன் லண்டனுக்குச் சென்றுள்ளார் தோனி. லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் ஆட்டங்களை அவர் பார்த்துள்ளார். நேற்று நடால் பங்கேற்ற பரபரப்பான காலிறுதி ஆட்டத்தை அவர் நேரில் கண்டுகளித்துள்ளார். இதன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

லண்டனில் குடும்பத்தினர், நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் தோனி. இந்தக் கொண்டாட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் கலந்துகொண்டுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் விடியோவை தோனியின் மனைவி சாக்‌ஷி இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.

 

Tags : MS Dhoni
ADVERTISEMENT
ADVERTISEMENT