செய்திகள்

துளிகள்...

7th Jul 2022 01:35 AM

ADVERTISEMENT

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.

பா்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி அணிவகுப்பில் இந்தியாவின் சாா்பில், ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தேசியக் கொடியேந்துவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களை விட்டு வெளியேறி 13-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். மறுபுறம், ரிஷப் பந்த் முதல் முறையாக 5-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறாா்.

தென் கொரியாவில் இம்மாதம் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சாா்பில் 49 போ் கொண்ட அணி பங்கேற்கிறது.

ADVERTISEMENT

இலங்கை மகளிரணிக்கு எதிரான கடைசி ஒன் டே ஆட்டத்தில் இந்திய மகளிரணி வியாழக்கிழமை விளையாடுகிறது.

பந்தெஸ்லிகா போட்டியில் விளையாடிய குரோஷிய கால்பந்து வீரா் பீட்டா் ஸ்லிஸ்கோவிச்சை சென்னையின் எஃப்சி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT