செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: டாப் 10 பட்டியலில் உள்ள இந்திய வீரர்கள்

6th Jul 2022 05:40 PM

ADVERTISEMENT

 


இந்தியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது.

இதையடுத்து இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் டாப் 10-ல் இந்திய வீரர்கள் சிலர் இடம்பிடித்துள்ளார்கள்.

5-வது டெஸ்டில் பிரபல இந்திய பேட்டர் விராட் கோலி 11, 20 எனக் குறைவான ரன்களே எடுத்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளார். இன்று வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 9-ம் இடத்திலிருந்து 13-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார் கோலி. நவம்பர் 16-க்குப் பிறகு முதல்முறையாக டாப் 10 பட்டியலில் கோலி இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாமல் இருப்பதைத் தற்போது தரவரிசைப் பட்டியலும் உறுதி செய்துள்ளது.

ADVERTISEMENT

நியூசிலாந்து தொடருக்கு முன்பு 47-வது இடத்தில் இருந்த பேர்ஸ்டோ, 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 5-வது டெஸ்டில் சதமும் அரை சதமும் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த், 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஜோ ரூட்டும் 2-வது இடத்தில் லபுஷேனும் 3,4-ம் இடங்களில் ஸ்மித், பாபர் ஆஸமும் உள்ளார்கள். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10 பட்டியலில் உள்ள இந்திய வீரர்கள்

பேட்டிங் டாப் 10 பட்டியலில் ரிஷப் பந்த் 5-ம் இடத்திலும் ரோஹித் சர்மா 9-வது இடத்திலும் உள்ளார்கள்.

பந்துவீச்சு டாப் 10 பட்டியலில் அஸ்வின் 2-ம் இடத்திலும் பும்ரா 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 

ஆல்ரவுண்டர் டாப் 10 பட்டியலில் ஜடேஜா முதலிடத்திலும் அஸ்வின் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT