செய்திகள்

நான் ஆல்ரவுண்டர் இல்லை: ஜஸ்பிரித் பும்ரா

5th Jul 2022 05:54 PM

ADVERTISEMENT

 

இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தன்னை ஆல்ரவுண்டர் என்று இப்போதைக்கு அழைக்க முடியாது எனக் கூறியுள்ளார். 

2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி கடைசி டெஸ்டில் தோற்று தொடர் சமநிலைக்கு வந்தது. மெக்குல்லம் -பென் ஸ்டோக்ஸ் அணி அதிரடியாக விளையாடி வெற்றியை குவித்து வருகிறது. 

பும்ரா இந்தத் தொடரில் பந்து வீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிராட் வீசிய ஒரு ஓவரில் 35 ரன்களை எடுத்து உலக சாதனைப் படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகளையும் எடுத்தார். இதனால் புதிய ஆலரவுண்டர் உருவாகிவிட்டாரா என கேள்வி எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதைக் குறித்து தற்காலிக டெஸ்ட் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா பேசியதாவது: 

என்னை ஆல்ரவுண்டர் என்று சொல்ல முடியாது. 3நாள் நாங்கள் நன்றாக விளையாடினோம். நேற்று ஒரு நாள் பேட்டிங் ஒழுங்காக விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரசியமே அதுதான். முதல் நாள் மழை வராமல் இருந்திருந்தால் நாங்கள் ஆட்டத்தை வென்றிருப்போம். இங்கிலாந்து சிறப்பாக விளையாடினார்கள். இரண்டு கிரிக்கெட் அணிகளும் நன்றாக விளையாடியது. அதனால் தொடரும் சமநிலையில் முடிந்தது மகிழ்ச்சியே. கேப்டனாக பொறுப்பேற்று விளையாடியது சவாலாகவும் கௌரவமாகவும் இருந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT