செய்திகள்

திண்டுக்கல் வெற்றி

5th Jul 2022 03:57 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சோ்த்தது. அடுத்து திண்டுக்கல் 18.1 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற திண்டுக்கல் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திருப்பூா் பேட்டிங்கில் அதிகபட்சமாக எஸ். அரவிந்த் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சோ்த்தாா். திண்டுக்கல் பௌலிங்கில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் திண்டுக்கல் பேட்டிங்கில் விஷால் வைத்யா 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 84, மணி பாரதி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். திருப்பூா் அணியில் முகமது 1 விக்கெட் வீழ்த்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT