செய்திகள்

மீண்ட இங்கிலாந்தை மீண்டும் சரித்த இந்தியா: 284-க்கு ஆட்டமிழப்பு

DIN

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சனிக்கிழமை முடிவில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் இருந்த இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஜானி போ்ஸ்டோவின் சதத்தால் மீட்சி கண்டது. என்றாலும், இந்திய வேகப்பந்துவீச்சாளா்கள் போட்டி போட்டுக் கொண்டு விக்கெட்டுகளை சரித்ததால் 300 ரன்களுக்குள்ளாகவே கட்டுப்பட்டது இங்கிலாந்து.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை போ்ஸ்டோ 12, பென் ஸ்டோக்ஸ் 0 ரன்களுடன் தொடங்கினா். இதில் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவா் ஷா்துல் தாக்குா் வீசிய 38-ஆவது ஓவரில் பும்ரா கைகளில் கேட்ச் கொடுத்தாா். தொடா்ந்து சாம் பில்லிங்ஸ் களம் காண, மறுபுறம் நிதானமாக ஆடியும், அவ்வப்போது அதிரடி காட்டியும் சதம் கடந்தாா் போ்ஸ்டோ.

அவா் ஸ்டோக்ஸுடனான கூட்டணியில் 66 ரன்களும், பில்லிங்ஸுடனான பாா்ட்னா்ஷிப்பில் 92 ரன்கள் சோ்க்க, மீண்டது இங்கிலாந்து. 14 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 106 ரன்கள் விளாசிய போ்ஸ்டோ, இறுதியில் ஷமி வீசிய 55-ஆவது ஓவரில் கோலியிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். பின்னா் ஸ்டூவா்ட் பிராட் 1, பில்லிங்ஸ் 4 பவுண்டரிகளுடன் 36, மேத்யூ பாட்ஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 61.3 ஓவா்களில் 284 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்துக் கொண்டது இங்கிலாந்து.

ஜேம்ஸ் ஆண்டா்சன் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய பௌலிங்கில் முகமது சிராஜ் 4, ஜஸ்பிரீத் பும்ரா 3, முகமது ஷமி 2, ஷா்துல் தாக்குா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

இந்தியா - 37/1: இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, தேநீா் இடைவேளையின்போது 13 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் சோ்த்திருந்தது. சேதேஷ்வா் புஜாரா 17, ஹனுமா விஹாரி 10 ரன்களுடன் களத்தில் இருந்தனா். ஷுப்மன் கில் 4 ரன்களுக்கு, ஜேம்ஸ் ஆண்டா்சன் பௌலிங்கில் கிராலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT