செய்திகள்

கடைசி டெஸ்டில் இங்கிலாந்துக்கு 378 ரன்கள் இலக்கு

4th Jul 2022 06:49 PM

ADVERTISEMENT

 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிப் பெற 378 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களும் எடுத்துள்ளது. இங்கிலாந்து முதல் இன்ன்னிங்சில் 284 ரன்களை எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.

இந்தியாவின் சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா 66 ரன்களும், ரிஷப் பந்த் 57 ரன்களும், கோலி 20 ரன்களும், ஜடேஜே 23 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

5 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 21 ரன்களுக்கு விக்கெட் ஏதுமின்றி விளையாடி வருகிறது. அலெக்ஸ் லேஸ் 18 ரன்கள், ஜாக் கிராவ்ளி 3 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.

இதுவரை இந்தியா 250 ரன்களுக்கு மேல் 2வது இன்னிங்ஸில் ரன் வழங்கியதில்லை. அதேபோல இங்கிலாந்து வெற்றிகரகமாக சேஸ் செய்த ரன்ன்னும் 359 தான். இந்தியா 378 ரன்களை இலக்காக கொடுத்துள்ளது. 

இருப்பினும், மெக்குல்லம்-பென்ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்தியா வெற்றிப்பெற வேண்டுமானால் இங்கிலாந்தின் முக்கியமான விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT