செய்திகள்

550 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டூவர்ட் பிராட்

4th Jul 2022 04:09 PM

ADVERTISEMENT

 

டெஸ்ட் போட்டிகளில் 550 விக்கெட்டுகளை எடுத்த 3வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் படைத்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 550 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

இவர் ஓவரில் பும்ரா 35 ரன்கள் எடுத்து உலக சாதனைப் படைத்ததால் இவரது 550 விக்கெட் சாதனையை உலகம் கண்டுக்கொள்ளாமல் போனது துரதிஷ்டமானது. 

ADVERTISEMENT

வேகப்பந்து வீச்சாளர்களில் 550 விக்கெட்டுகளை எடுத்ததில் 3வது இடத்தினைப் பிடித்துள்ளார் பிராட். பொதுவாக பந்து வீச்சாளர்கள் என்ற முறையில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். 

550 விக்கேட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியல்: 

  1. ஜேம்ஸ் ஆண்டர்சன்   657 
  2. கிளென் மெக்ரத்         563 
  3. ஸ்டூவர்ட் பிராட்           552  

 

பொதுவாக டெஸ்ட் விக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்: 

  1. எம். முரளிதரன்       800 
  2. எஸ். வார்னே          708 
  3. ஜே. ஆண்டர்சன்    657
  4. அ. கும்ப்ளே             619 
  5. கி. மெக்ரத்               563
  6. எஸ். பிராட்               552  

இதையும் படிக்க: பந்து வீச்சில் பும்ரா புதிய சாதனை

ADVERTISEMENT
ADVERTISEMENT