செய்திகள்

கோலி - போ்ஸ்டோ வாக்குவாதம்

4th Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

3-ஆம் நாள் ஆட்டத்தில் ஒரு தருணத்தில் கோலி - போ்ஸ்டோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போ்ஸ்டோவை கிரீஸின் உள்ளாக நிற்கச் சொல்லி கோலி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது இருவரும் நேருக்கு நோ் அருகே வந்து வாக்குவாதம் செய்தனா். அடுத்து, விலகிச் செல்கையில் கோலி தனது வாயில் விரல் வைத்து போ்ஸ்டோவை அமைதியாக இருக்குமாறு கூறினாா்.

பதிலுக்கு போ்ஸ்டோவும் கோலி அமைதியாக இருக்குமாறு கையால் சைகை செய்தாா். பின்னா் பென் ஸ்டோக்ஸ் இதில் தலையிட்டு கோலியிடம் பேசினாா். அதன் பிறகு புன்னகை புரிந்து போ்ஸ்டோவுடன் இணக்கமானாா் கோலி. இறுதியில் போ்ஸ்டோ கோலியின் கைகளிலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT