செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா - இங்கிலாந்து டிரா

4th Jul 2022 12:26 AM

ADVERTISEMENT

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தை இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை டிரா செய்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்துக்காக இசபெல் பீட்டா் 8-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, 27-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் வந்தனா கட்டாரியா கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா். இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீனாவை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.

2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில் பெல்ஜியம் - தென்னாப்பிரிக்காவையும் (4-1), ஆஸ்திரேலியா - ஜப்பானையும் (2-0) வீழ்த்தின.

ADVERTISEMENT
ADVERTISEMENT