செய்திகள்

விம்பிள்டன் வரை சென்ற 'வாத்தி கம்மிங்'!

3rd Jul 2022 06:20 PM

ADVERTISEMENT


ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வருகை தரும் புகைப்படத்தை விம்பிள்டன் தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் 'வாத்தி கம்மிங்' என குறிப்பிட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

விஜய், அனிருத் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'வாத்தி கம்மிங்' பாடல் நாடு முழுவதும் பெரும் ஹிட் அடித்தது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாட, இது மிகப் பெரிய அளவில் பிரபலமானது. இந்தப் புகழ் தற்போது கிரிக்கெட்டை தாண்டி டென்னிஸுக்கும் சென்றுள்ளது.

டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிரதானமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்ககரண் ஜோகரின் படங்களால்தான் மகிழ்ச்சியில்லாத திருமணங்கள் நடக்கிறது : சமந்தா

ADVERTISEMENT

இதனிடையே, லண்டனிலுள்ள கிளப்பின் பிரதான கோர்ட்டின் 100-வது ஆண்டை அனுசரிக்கும் வகையில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் வருகை தந்துள்ளார். 

பெடரர் வருகை தரும் புகைப்படத்தை விம்பிள்டன் தனது அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளது. இதில் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் 'வாத்தி கம்மிங்' என விம்பிள்டன் குறிப்பிட்டுள்ளது. 'வாத்தி கம்மிங்' சர்வதேச அளவில் டிரெண்டாகியுள்ளதை இது வெளிப்படுத்துகிறது. இந்தப் படத்தை தமிழ் ரசிகர்கள் அதிகளவில் பகிரத் தொடங்கியுள்ளனர்.

1999-இல் விம்பிள்டன் போட்டியில் அறிமுகமானதிலிருந்து ஒருமுறைகூட பெடரர் அதை தவறவிட்டதில்லை. இந்த நிலையில், காயம் காரணமாக நடப்பு விம்பிள்டன் போட்டியில் அவர் விளையாடவில்லை. கடந்தாண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் அவர் காலிறுதிச் சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Tags : Vaathi Coming
ADVERTISEMENT
ADVERTISEMENT