செய்திகள்

ஜானி பேர்ஸ்டோவை கோபப்படுத்தினால் அவர் இன்னும் நன்றாக விளையாடுவார்: ஜிம்மி நீஷம்

3rd Jul 2022 06:14 PM

ADVERTISEMENT

 

ஜானி பேர்ஸ்டோவை கோபப்படுத்தினால் அவர் இன்னும் 10 மடங்கு நன்றாக விளையாடுவாரென நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் கருத்துத் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் எல்லோரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஜானி பேர்ஸ்டோ மட்டும் அபாரமாக விளையாடி வருகிறார். தற்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டாலும் அபாரமாக ஆடி 100 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 

3ஆம் நாள் ஆட்டத்தின் ஆரம்பித்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜானி பேர்ஸ்டோவை வம்புக்கு இழுத்தார். இருவரும் ஆவேசமாக பேசிக்கொண்டனர். நடுவர் இருவரையும் சமாதனப்படுத்தினர். பிறகு பேர்ஸ்டோ மிகவும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 

ADVERTISEMENT

இதற்கு பதில் சொல்லும் விதத்தில் நியூசிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

எதிரணியினர் ஜானி பேர்ஸ்டோவை கோபப்படுத்தினால் அவர் இன்னும் 10மடங்கு நன்றாக விளையாடுவார். தினமும் காலையில் அவருக்கு எதாவது பரிசு கொடுங்கள். அவர் விளையாடும்போது மதிப்புமிக்க அவரது காரினை வைத்துள்ளோம் என தெரியப்படுத்துங்கள். எதையாவது செய்து அவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT