செய்திகள்

முதல் டி20 மழையால் கைவிடப்பட்டது

3rd Jul 2022 12:13 PM

ADVERTISEMENT

 

வங்காள தேசம் - மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

மே.இ. தீவுகள் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் விளையாடிய வங்கதேச அணி 13 ஓவர் முடிவில் 105 ரன்களை எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நிற்காத காரணத்தினால் ஆட்டம் கைவிடப்பட்டது. 

வங்க தேச அணியில் ஷகிப் அல் ஹாசன் 15 பந்துகளில் 29 ரன்களை எடுத்தார். 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 193.33 ஆகும்.

ADVERTISEMENT

டெஸ்ட் போட்டியில் தொடரினை இழந்த வங்கதேச அணிக்கு இந்த டி20 தொடரிலாவது வெற்றி கிடக்குமா என அந்நாட்டு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் வேளையில் மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT