செய்திகள்

முடிவு தெரிந்த பிறகு ஆட்டத்தைப் பார்ப்பார்களா? : வங்கதேச முன்னாள் டெஸ்ட் கேப்டன்

DIN

வங்காள தேசம் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியது. முடிவு தெரிந்த பிறகு ஆட்டத்தைப் பார்க்க வேண்டுமா என வங்கதேச முன்னாள் டெஸ்ட் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். 

வங்காள தேசம் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் மே.இ. தீவுகள் அணி வெற்றிப் பெற்றது. இதற்கு முன்பும் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், வங்கதேசத்தின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ரஹிபுல் ஹாசன் கூறியதாவது: 

தமிம் இக்பால் , ஷகிப் அல் ஹாசன் ஆகியோர் விளையாடி அவுட் ஆகும் வித்ததைப் பார்த்தால் இவர்கள் எப்படி டெஸ்டில் 5000 ரன்களை எடுத்தனர் என்று அதிசயிக்க தோன்றுகிறது. 

எங்களது நாட்டில் பெரிதாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் இல்லை. மற்றைய நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம் என்னவெனில், ஆட்டத்தைப் பார்க்கும் முன்னரே மக்களுக்கு ஆட்டத்தின் முடிவு தெரிந்து விடுகிறது. எப்படியும் வங்கதேசம் தோற்கப் போகிறது என தெரிந்து விடுகிறது. இந்த மோசமான கிரிக்கெட்டைப் பார்க்க எப்படி வருவார்கள்? நீங்கள் ஒழுங்காக விளையாடினால் தொடர்ந்து வெற்றிப் பெற்றால் ரசிகர்கள் தானாக வருவார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT