செய்திகள்

தோல்வியே அடையாமல் ஜொலிக்கும் புதிய ஆஸி. கேப்டன்

2nd Jul 2022 03:22 PM

ADVERTISEMENT

 

கடந்த வருட நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார்.

2018-ல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46-வது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 2019 ஆஷஸ் தொடரில் கோப்பையைத் தக்கவைக்க உதவினார். ஆனால் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் டிம் பெயின். இதையடுத்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். 1956-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

29 வயது கம்மின்ஸ், டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு தோல்வியே அடையாமல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

ADVERTISEMENT

முதல் தொடரான ஆஷஸை 4-0 என வென்று காண்பித்தார் கம்மின்ஸ். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் அணி சிக்கலுக்கு ஆளானது. இன்று புதிய கேப்டன், புதிய பயிற்சியாளருடன் அந்த அணி விளையாடுவதற்கு இந்தத் தோல்வி முக்கியக் காரணமாக அமைந்தது. அடுத்த பாகிஸ்தானுக்குச் சென்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடரை வென்று அசத்தியது. தற்போது இலங்கையில் இரு டெஸ்டுகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த வருடத் தொடக்கத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 எனத் தோற்ற ஆஸி. அணி அதன்பிறகு டெஸ்ட் தொடர்களில் கம்மின்ஸ் தலைமையில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் (77.78%) உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸி. அணி தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

கம்மின்ஸ் கேப்டனான பிறகு ஆஸி. டெஸ்ட் அணிக்குக் கிடைத்த முடிவுகள்

வெற்றி
வெற்றி
டிரா
வெற்றி
டிரா (பாகிஸ்தானில்)
டிரா (பாகிஸ்தானில்)
வெற்றி (பாகிஸ்தானில்)
வெற்றி (இலங்கையில்)

ADVERTISEMENT
ADVERTISEMENT