செய்திகள்

எலோா்டா கோப்பை:இறுதிச் சுற்றில் கலைவாணி

2nd Jul 2022 11:45 PM

ADVERTISEMENT

எலோா்டா கோப்பைக்கான சா்வதேச குத்துச்சண்டை போட்டி மகளிா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினாா் சென்னை வீராங்கனை கலைவாணி.

கஜகஸ்தானின் தலைநகா் நூா்சுல்தான் நகரில் எலோா்டா கோப்பை சா்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 48 கிலோ பிரிவு அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் பா்ஸோனாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் சென்னை வீராங்கனை கலைவாணி. அவரது பலமான குத்துகள் பா்ஸோனாவை நிலைகுலையச் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆடவா் பிரிவில் குல்தீப் குமாா் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் உள்ளூா் வீரா் கைரட் எா்நுரை போராடி வென்றாா். மற்றொரு ஆட்டத்தில் யஷ்பால் 0-5 என கஜகஸ்தானின் அஸ்லான் பெக்கிடம் வீழ்ந்தாா்.

மகளிா் 50 கிலோ பிரிவில் சவீதா 0-5 என ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் வெண்கல வீராங்கனை நமிக்கியிடம் தோல்வியடைந்தாா்.

ADVERTISEMENT

பபிதா பிஷ்ட் 81 கிலோ, ஜோதி 52 கிலோ, நீமா 63 கிலோ, ஆகியோா் அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கங்களுடன் திருப்தி அடைந்தனா்.

முதன்முதலாக நடைபெறும் எலோா்டா கோப்பை போட்டியில் இந்தியா, கஜகஸ்தான், கியூபா, மங்கோலியா, சீனா, உஸ்பெகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிச் சுற்று திங்கள்கிழமை நடைபெறும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT