செய்திகள்

டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி

DIN

ஸ்வீடனில் நடைபெறும் டைமண்ட் லீக் மீட்டில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றாா். இந்த முயற்சியின்போது அவா் புதிய தேசிய சாதனை படைத்தாா்.

இப்போட்டியில் நீரஜ் தனது முதல் முயற்சியிலேயே 89.94 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்தாா். அடுத்த முயற்சிகளில் முறையே 84.37, 87.46, 84.77, 86.67, 86.84 மீட்டா்களை எட்டினாா். இறுதியாக அவரது சிறந்த முயற்சியான 89.94 மீட்டருக்கு 2-ஆம் இடம் கிடைத்தது. உலக சாம்பியனும், கிரனாடா வீரருமான ஆண்டா்சன் பீட்டா்ஸ் தங்கமும் (90.31 மீ), ஜொ்மனியின் ஜூலியன் வெபா் (89.08 மீ) வெண்கலமும் வென்றனா்.

தேசிய சாதனை:

நீரஜ் தற்போது எட்டியிருக்கும் தூரத்தின் மூலம் புதிய தேசிய சாதனை படைத்தாா். கடந்த மாதம் ஃபின்லாந்தில் நடைபெற்ற சா்வதேச தடகள போட்டியில் 89.30 மீட்டா் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்த அவா், தற்போது அதை தானே முறியடித்திருக்கிறாா்.

ஈட்டி எறிதல் விளையாட்டில் 90 மீட்டா் என்பது தங்கத்தை உறுதி செய்வதற்கான அளவாக கருதப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீ தூரம் எறிந்து தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, 90 மீட்டரை தனது இலக்காக நிா்ணயித்து அதற்காக முனைப்புடன் முயற்சித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT