செய்திகள்

விராட் கோலி தன்னம்பிக்கையை இழந்துவிட்டார் : சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

2nd Jul 2022 03:23 PM

ADVERTISEMENT

 

இந்திய அணியின் முன்னால் கேப்டன் விராட் கோலி தனது தன்னம்பிக்கையை சிறிது இழந்துவிட்டாரென சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

விராட் கோலி சமீப காலமாக சரியாக ரன்களை குவிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்.

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று( ஜூலை1) தொடங்கியது. 18 பந்தில் 2 பவுண்டரிகள் அடித்திருந்த நிலையில் பாட் வீசிய பந்தில் விளையாடாமல் இருக்க பேட்டை மேலே தோல்லும் போது துரதிஷ்டவசமாக எட்ஜ் வாங்கி போல்ட் ஆனார். ஒவ்வொரு முறையும் விராட் கோலி அவுட் ஆகும் போது ஏதாவது அதிர்ஷ்டமில்லாமலே அவுட் ஆகும் போக்கு தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT

விராட் கோலி பற்றி  சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது: 

கிரிக்கெட் விமர்சகராக நான் விராட் கோலி தனது தன்னம்பிக்கையை சிறிது இழந்துவிட்டாரென சொல்லுவேன். அதிர்ஷ்டமின்மையும் இருக்கிறது. டெக்கினிக்கல் பிரச்சனை இருக்கிறது. அவர் அதிகமாக முன்னோக்கி வந்து பிரண்ட் புட்டில் விளையாடுகிறார். அவர் அதிக்தான் அதொக ரன் எடுத்திருந்தாலும் இப்போது அதில்தான் அதிகாமாகவும் அவுட் ஆகிறார். எல்லோரும் டெக்கினிக்கலாக சரியாக விளையாடாவிட்டாலும் ரன்களை எடுக்கின்றனர். 

விராட் கோலியின் இந்த நிலைமை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது. தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் ஃபார்மவுட் ஆனாலும் விரைவாக ஃபார்முக்கு வந்துவிடுவார்கள். ஆனால் கோலிக்கு இன்னும் எவ்வளவு நாள் இந்த மோசமான நிலை தொடருமெனத் தெரியவில்லை. 

இதையும் படிக்க: 17 வருட தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

ADVERTISEMENT
ADVERTISEMENT