செய்திகள்

ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் டெஸ்டிலிருந்து விலகல்

2nd Jul 2022 04:09 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

ஆஸ்டன் அகர் பதிலாக சுழல்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் ஆடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அகர்க்கு பதிலாக 17 பேர் கொண்ட அணியில் ஜான் ஹோலண்டை தேர்வு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிப் பெற்றது. இதில் சுழல்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்தது. ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

“ஸ்வெப்சன் குறித்துப் பேச மகிழ்ச்சியாக உள்ளது. முதல் இன்னிங்ஸிலும் சரி தற்போதும் சரி முக்கியமான சில விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டத்தின் நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தார். அவர் அழகாக பந்து வீசியதாக நினைக்கிறேன்” என டெஸ்ட் போட்டியை 3வது நாளிலே வென்ற அன்று பாட் கம்மின்ஸ் கூறினார். 

இதையும் படிக்க: விராட் கோலி தன்னம்பிக்கையை இழந்துவிட்டார் : சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

ADVERTISEMENT
ADVERTISEMENT