செய்திகள்

இலங்கை டெஸ்ட்: இரண்டரை நாள்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.

காலேவில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் எடுத்து 109 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்திருந்த ஆஸி. அணி, இன்று மீதமுள்ள 2 விக்கெட்டுகளை இழந்தது. 

2-வது இன்னிங்ஸிலும் தடுமாறிய இலங்கை அணி 22.5 ஓவர்களில் 113 ரன்களுக்குச் சுருண்டது. லயன், ஸ்வெப்சன், டிராவிஸ் ஹெட் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் அற்புதமாகப் பந்துவீசினார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக விக்கெட் எடுத்த டிராவிஸ் ஹெட், மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லயன் 4, ஸ்வெப்சன் 2 விக்கெட்டுகளும் எடுத்து இலங்கை அணியை நிலைகுலைய வைத்தார்கள். கேப்டன் கம்மின்ஸ் பந்துவீசவே வரவில்லை. அந்தளவுக்குச் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

2-வது இன்னிங்ஸில் 5 ரன்கள் இலக்கை 0.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. ரமேஷ் மெண்டிஸ் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார் வார்னர். முதல்முறையாக இலங்கையில் விளையாடிய டெஸ்டில் 2-வதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது ஆஸி. அணி. இதற்கு முன்பு வெற்றி பெற்ற ஏழு முறையும் முதலில் பேட்டிங் செய்தது. 

கேம்ரூன் கிரீன் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

2-வது மற்றும் கடைசி டெஸ்ட், காலேவில் ஜூலை 8 அன்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

SCROLL FOR NEXT