செய்திகள்

ஒரு வருடத்தில் 8 இந்திய கேப்டன்கள்!

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டுக்கு இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து கடந்த ஜூலை முதல் இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் 8-வது கேப்டன் ஆகிறார் பும்ரா.

ஜூலை 2021 முதல் ஷிகர் தவன், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, கே.எல். ராகுல், ரிஷப் பந்த், பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்கள்.

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியதையடுத்து இந்திய அணியில் கேப்டன்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகியிருக்கிறது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் 8-வது கேப்டனாக உள்ளார் பும்ரா.

கேப்டன்களின் எண்ணிக்கை அதிகமாகக் காரணம்?

கோலிக்கு அடுத்ததாக இந்திய டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் ஓய்வு, காயம், கரோனா எனப் பல்வேறு காரணங்களால் ரோஹித் சர்மாவால் சில தொடர்களில் இடம்பெற முடியவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் புதிய கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது. 

ஜூலை 2021 முதல் இந்திய அணியின் கேப்டன்கள்

ஷிகர் தவன் - 3 ஒருநாள், 3 டி20
விராட் கோலி - 7 டெஸ்டுகள், 5 டி20
ரோஹித் சர்மா - 2 டெஸ்டுகள், 3 ஒருநாள், 9 டி20
ரஹானே - 1 டெஸ்ட்
கே.எல். ராகுல் -  1 டெஸ்ட், 3 ஒருநாள்
ரிஷப் பந்த் - 5 டி20
பாண்டியா - 2 டி20
பும்ரா - 1 டெஸ்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT