செய்திகள்

அஸ்வினை டி20 அணியிலிருந்து நீக்கியது நியாயமா?

ச. ந. கண்ணன்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியிலும் தமிழக வீரர் ஆர். அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வருகிறார் அஸ்வின். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் முழுமையாக ஓவர்கள் வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2 ஆட்டங்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 5.25. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

2021 டி உலகக் கோப்பையிலிருந்து அஸ்வின் விளையாடிய சர்வதேச டி20 ஆட்டங்கள்

2/14 vs ஆப்கானிஸ்தான்
1/29 vs ஸ்காட்லாந்து
3/20 vs நமிபியா
2/23 vs நியூசிலாந்து
1/19 vs நியூசிலாந்து

ஆனால், தென்னாப்பிரிக்காவில் இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய அஸ்வின், 1/53, 0/68 என மோசமாகப் பந்துவீசினார். 

இதற்குப் பிறகு இந்திய வெள்ளைப் பந்து அணிகளில் அஸ்வினுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

ஐபிஎல் 2022 போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அஸ்வின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தினார். பேட்டிங்கில் 17 ஆட்டங்களில் 191 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 141.48. 9 சிக்ஸர்கள் அடித்தார். இதுபோல வேறெந்த ஐபிஎல்-லிலும் இத்தனை ரன்கள், சிக்ஸர்களை அவர் அடித்ததில்லை. பந்துவீச்சில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி - 7.51.

இதனால் இந்திய டி20 அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியத் தேர்வுக்குழு அஸ்வினை மீண்டும் நிராகரித்துள்ளது.

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியின் வெற்றிகளுக்கு உதவியுள்ளார் அஸ்வின். தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் மோசமாகப் பந்துவீசிய காரணத்துக்காக டி20 அணியிலிருந்தும் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழுவின் இந்த முடிவைப் பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள்.  இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்கான திட்டங்களில் அஸ்வின் இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. தினேஷ் கார்த்திக் இதுபோல அநியாயமாக டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வினுக்கும் தற்போது அதே நிலை ஏற்பட்டுள்ளது. டிகே போல அஸ்வினும் மீண்டும் போராடுவார், கதவை ஓங்கித் தட்டுவார் என நம்புவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT