செய்திகள்

ஆண்டர்சன் அபாரம்: இரு விக்கெட்டுகளை இழந்த இந்தியா

DIN


இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5-வது டெஸ்ட், இப்போது நடைபெறுகிறது. ரோஹித் சர்மா கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பும்ரா இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுகிறார்.

பிர்மிங்கமில் நடைபெறும் 5-வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷர்துல் தாக்குர், ஜடேஜா, விஹாரி, புஜாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். அஸ்வினுக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில்லும் புஜாராவும் விளையாடவுள்ளார்கள். இங்கிலாந்து அணி நேற்றே அறிவிக்கப்பட்டது.

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலை மூத்த வீரர் ஆண்டர்சன் நன்குப் பயன்படுத்திக் கொண்டார். ஷுப்மன் கில் 4 பவுண்டரிகளை விரைவாக அடித்து 17 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய புஜாரா, 46 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்கள் எடுத்தார். எனினும் ஆண்டர்சனின் அற்புதமான பந்தில் கிராவ்லியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு முன்பு மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. 

இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. விஹாரி 14 ரன்கள், கோலி 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்கள். ஆண்டர்சன் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT