செய்திகள்

நான் இருக்கும் வரை அது நடக்காது: அணித் தேர்வு சர்ச்சை பற்றி மே.இ. தீவுகள் பயிற்சியாளர்

DIN

இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மே.இ. தீவுகள் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மே.இ. அணி வீரர்கள் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 3-வது டி20 ஆட்டத்தில் ஓடியன் ஸ்மித் இடம்பெறாத காரணத்தால் இந்தச் சர்ச்சை உருவானதாகத் தெரிகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் ஓடியன் ஸ்மித் விளையாடினார். முதல் டி20யில் ஒரு ஓவர் வீசினார். 2-வது டி20யில் பேட்டிங்கில் 7 ரன்கள் எடுத்தார். 3-வது டி20 ஆட்டத்தில் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக ஸ்மித்தை நீக்கிவிட்டு ரோவ்மேன் பவலைச் சேர்த்தார்கள். அந்த ஆட்டத்தில் ரோவ்மேன் பவல், 53 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். 

இந்த விவகாரம் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியதாவது:

யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தவோ யாரையும் கீழே தள்ளவோ விரும்ப மாட்டோம். நான் இருக்கும்வரை அது நடக்காது. இந்த விவகாரம் தொடர்பாக நடக்கும் முட்டாள்தனத்தை நிறுத்த வேண்டும். அணிக்கு யார் சிறந்த வீரர்களாக இருப்பார்களோ அவர்களைத் தேர்வு செய்வோம். அணியில் ஓடியன்  இடம்பிடிக்கவில்லையென்றால் ரோவ்மேன் பவல் நன்றாக விளையாடுவார் என நாங்கள் எண்ணியதால் தான். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் யாரையும் பாதிப்புக்கு ஆளாக விடமாட்டோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT