செய்திகள்

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி: வாரியத் தலைவர் குற்றச்சாட்டு

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அந்த அணியின் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் மே.இ. தீவுகள் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மே.இ. அணி வீரர்கள் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறியதாவது:

மூன்று அற்புதமான வெற்றிகளை அடைந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி மற்றும் கேப்டன் பொலார்ட் மீது வன்மத் தாக்குதல் நிகழ்த்தி, அணியில் பிளவை ஏற்படுத்தும் விதை தூவப்பட்டுள்ளது. கேப்டன் பொலார்டுக்குக் கெட்டப் பெயரை உண்டாக்கவும் டி20 தொடரில் நன்றாக விளையாடி வரும் அணியின் வெற்றிப் பயணத்தைத் தடுக்கவும் முயற்சி நடைபெற்றுள்ளது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணியின் கேப்டனுக்கும் எந்தவொரு வீரருக்கும் இடையே கருத்து வேறுபாடும் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT