செய்திகள்

21-க்கு இன்னும் ஒரு வெற்றி தேவை: ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் நடால்

28th Jan 2022 12:33 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஒற்றையர் இறுதிச்சுற்றுக்குப் பிரபல வீரர் நடால் முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை 20 முறையும் அதில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை மட்டும் 13 முறையும் வென்றவர் நடால். கடந்த வருடம் விம்பிள்டன், யு.எஸ். ஓபன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. 

இந்த வருடத்தின் முதல் தொடக்க கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் தற்போது இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் நடால். இன்று நடைபெற்ற ஆடவர் அரையிறுதிச்சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த பெர்ரட்டினியை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3 6-2 3-6 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார் நடால். ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் ஆறாவது முறையாக இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளார். 

ADVERTISEMENT

ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், நடால் ஆகிய மூன்று ஜாம்பவான்களும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள். இம்முறை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை நடால் வென்றால், ஆடவர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற வீரர் என்கிற சாதனையை நடால் படைப்பார்.

Tags : Nadal
ADVERTISEMENT
ADVERTISEMENT