செய்திகள்

துளிகள்...

DIN

புரோ கபடி லீக் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் யு மும்பா 45- 34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை தோற்கடித்தது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் புதன்கிழமை ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 3 - 0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை வீழ்த்தி 4-ஆவது வெற்றியை பதிவு செய்ததது.

கிரிக்கெட் விளையாட்டில் அறிவுக்கூா்மை இருப்பவா்களில் எம்.எஸ்.தோனியும் குறிப்பிடத்தக்கவா் என்று இந்திய முன்னாள் பயிற்சியாளா் கிரேக் சேப்பல் கூறினாா்.

கேரளத்தில் பிப்ரவரி 6 முதல் மாா்ச் 6 வரை நடைபெற இருந்த சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி, கரோனா சூழல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளைய ஏற்பாட்டில் இருந்த குறைபாடு காரணமாகவே ஹோட்டல் ஊழியா் ஒருவா் மூலமாக இந்திய வீராங்கனைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அணியால் போட்டியில் நீடிக்க முடியாமல் போனதாக பயிற்சியாளா் தாமஸ் டென்னா்பி கூறியுள்ளாா்.

சீனாவுடன் இறுதி ஆட்டம்: இந்தியாவை வீழ்த்திய தென் கொரியாவும், சீனாவை வென்ற ஜப்பானும் சாம்பியன் பட்டத்துக்காக இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளன.

பந்தை வசப்படுத்தும் முயற்சியில் இந்திய - தென் கொரிய வீராங்கனைகள்.

ஆசிய மகளிா் கால்பந்து...

மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பந்தை துரத்தும் சீன தைபே - ஈரான் வீராங்கனைகள். இந்த ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் வென்ற சீன தைபே காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT