செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா நியமனம்

27th Jan 2022 01:25 PM

ADVERTISEMENT

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுடன்  5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கும் இலங்கை அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முடிவிற்குப் பின் பேசிய மலிங்கா, ‘எங்களிடம் மிகவும் திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களிடம் எனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT