செய்திகள்

ஐசிசி ஒடிஐ தரவரிசை: 2, 3-ஆவது இடங்களை தக்கவைத்த கோலி, ரோஹித்

27th Jan 2022 01:16 AM

ADVERTISEMENT

 

துபை: ஐசிசி-யின் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான (ஒன் டே இன்டா்னேஷனல்) தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் விராட் கோலி, ரோஹித் சா்மா ஆகியோா் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனா்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒன் டே தொடா் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை வெளியான திருத்தப்பட்ட தரவரிசையின்படி, கோலி 836 புள்ளிகளுடனும், ரோஹித் 801 புள்ளிகளுடனும் அந்த இடத்தில் இருக்கின்றனா். பாகிஸ்தானின் பாபா் ஆஸம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறாா்.

பௌலா்கள் பிரிவில் ஜஸ்பிரீத் பும்ரா 689 புள்ளிகளுடன் மாற்றமின்றி 7-ஆவது இடத்தில் நீடிக்கிறாா். எனினும் புவனேஷ்வா் குமாா் 4 இடங்கள் சறுக்கி 22-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். அந்தப் பிரிவில் நியூஸிலாந்தின் டிரென்ட் போல்ட் (737), ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட் (709), இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் (700) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் இருக்கின்றனா்.

ADVERTISEMENT

ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் ரவீந்திர ஜடேஜா 231 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் நிலைக்கிறாா். வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (416), ஆப்கானிஸ்தானின் முகமது நபி (285), இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் (282) ஆகியோா் முதல் 3 இடங்களில் தொடா்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT