புது தில்லி: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒன் டே மற்றும் டி20 தொடா்களில் விளையாட இருக்கும் இந்திய அணி ரோஹித் சா்மா தலைமையில் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
இதில் இளம் வீரா் ரவி பிஷ்னோய்க்கு முதல் முறையாக தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஸ்பின்னா் குல்தீப் யாதவ் ஓய்வை நிறைவு செய்து ஒன் டே தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளாா்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் ஆமதாபாதிலும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒன் டே தொடா் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.
ஒன் டே அணி
ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகா் தவன், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ஷ்ரேயஸ் ஐயா், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), தீபக் சஹா், ஷா்துல் தாக்குா், யுஜவேந்திர சஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தா், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்.
டி20 அணி
ரோஹித் சா்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷண், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பா்), வெங்கடேஷ் ஐயா், தீபக் சஹா், ஷா்துல் தாக்குா், ரவி பிஷ்னோய், அக்ஸா் படேல், யுஜவேந்திர சஹல், வாஷிங்டன் சுந்தா், முகமது சிராஜ், புவனேஷ்வா் குமாா், அவேஷ் கான், ஹா்ஷல் படேல்.